Thursday, January 7, 2010

இன்னும் மறக்கவில்லை...

தீபாவளி வரும்நாளை 
திரும்ப எணிப்பார்த்தது...  
புத்தாடை பையதுவை 
நித்தமும் திறந்துபார்த்தது...  


பட்டாஸு பொட்டலத்தை 
வெட்டவெயிலில் காயவைத்தது...  
நரிக்குறவர் வருகைகண்டு 
திருவிழாவை அறிந்தது...  


மண்குதிரை மீதமர்ந்து 
மனவீதி உலாவந்தது...  
ஈச்சமர நிழல்மணலில் 
பூச்சிபொத்தி விளையாடியது...  


மிதிவண்டி மீதுவர்ணப் 
பெயரெழுதிப் பார்த்தது...  
வார இதழ் ராணியில் 
தங்கப்புறா தொடர்படித்தது...  


குட்டைகால்சட்டை துறந்து 
வேட்டிகட்டி வியந்தது...  
பசுமைவயல் வெளியை 
பரவசமாய் ரசித்தது...  


நாவிதன் முடிவெட்டும் 
நலினத்தில் அயர்ந்தது...  
தெருக்கூத்திற்க்கு முதல்வரிசை 
இடம்போட்டு அமர்ந்தது...  


வித்தைக்காரன் கொட்டகையை 
வியப்பாய் பார்த்தது...  
விடுமுறையை நோக்கிநோக்கி 
கொடுமைநாள் கழிந்தது...  


செதுக்கிய பலகைகொண்டு 
கிரிகெட் விளையடியது...  


முத்துபிரகாஸ், கொட்டாப்புளி, 
சுப்பிரமணி, கடப்பாரை, 
பத்துக்காசு, கட்டப்பலு, 
அய்யாரெட்டு, ரசினி, 
முத்து, ரவி, சேகர், 
அருங்கொளம், செல்வா, முத்துசெல்வம், 
தவக்களை இன்னும் பலருடன் சுற்றியது...  


பத்துபைஸா தேற்றி 
குச்சிஐஸ் சுவைத்தது...  
புதுசெருப்பு பாதமறைய 
தெருவெங்கும் நடந்தது...  


புதிதாய் வாங்கிய தொலைக்காட்சி பெட்டியை 
நடுஇரவில் தொட்டுப்பார்த்தது...  


நொண்டி, ஐஸ்பாய், திருடன்போலீஸ், 
கபடி, கிரிகெட், கிட்டி, கோலி, 
படம், மரக்கபடி, தாயம்,பரமபதம், 
பல்லாங்குழி,கிணற்றுபாய்தல், 
சைக்கிள் ரேஸ், சீட்டுக்கட்டு, பொக்காராஜா, 
பம்பரம், சீப்புக்கல், பேன்தா, மூனுகுழி, கால்பந்து, 
இன்னும்பல விளையாடியது...  


கரம்பை மண்தோண்டி, 
கலவை மண்சேர்த்து, 
கையில்பிள்ளையார் செய்து, 
தொப்புள்காசை உருவிக்கொண்டு 
குளத்தினில் தூக்கிப்போட்டது...  


திருவிழா புகைப்படக்காரனிடம் 
தம்பியுடன் போட்டா எடுத்தது...  


எதுவும் மறக்கவில்லை எனக்கு... 
இன்னும் மறக்கவில்லை எனக்கு...

No comments:

Post a Comment