Thursday, January 7, 2010

கடைசி

கடைசி சூரியன்

இனிவரும் ஆண்டை நோக்கி
இளையவரும் முதியோரும்
திரண்டனர் இடங்களில்
திரளாய் திக்கெட்டும்..

கடைசி சூரியனை
கடைவழி அனுப்பிவிட
மடைபொங்கும் ஆற்றருகில்
மறைமேற்க்கு நோக்கிநின்றேன்.

பொழுதுசாய ஒளிமங்க
விழுது வேர்கொண்ட
ஆலம்போல் மேகங்கள்
மேற்கின் அடியில்..

ஆதவன் அடைதற்க்கு
அவன்வழி செல்லுகையில்
காதைதூரம் முன்னமே
கைதுசெய்யும் மேகங்கள்..

மானுடரின் இனச்சாதி
மதப்போரின் அறியாமை
உலகினை முன்னமே
உறைந்திட செய்யுமோ..?

No comments:

Post a Comment