Thursday, January 7, 2010

மீதி

அன்று ஒருநாள் அந்தி வேளையிலே
நின்று கருத்தமேகம் அதிரயிலே

நரைவிழுந்த ஒருமனிதன்
தரைவிழுந்த துளிமழையை
தயங்கிபார்த்த பின் நேரம்நோக்கினான்.

ஏழரையகியும் பஸ்ஸுவரலை
கேள்வி
ப்பட்டதுலேந்து எதுவும் ஓடல..

இங்கேந்து ஒருமணிநேரம்
அஞ்சுகிராமம் போயி
அங்கேந்து எட்டரைக்கு
டவுன்வண்டி புடிச்சு
அஞ்சு மயில் போகனும்
அருமை மகள பாக்க...

ஆகா வண்டிவந்தாசு
ஏறிஇடம் போட்டாசு..

கட்டிக்கொடுத்த ஆறாமாசம்
கால்தவறி விழுந்ததிலே
அஞ்சுமாச கருவ
அந்த எசக்கி கலச்சுபுட்டா...

பாத்து பாத்து வளத்தபுள்ள
பத்திரமா வளந்தபுள்ள
எட்டுவருசங் கழிச்சு
எசக்கி தந்தபுள்ள..

பதினெட்டெ வயசான
பச்சபுள்ள ஏம்புள்ள.
சீக்கிரமே ஊர்போயி செல்லமே ஒனபாத்து
சாக்கு சொல்லியாசும் ஒன்னகூட கூட்டிபோனும்..

கண்டக்டர் வந்தாரு
காச கேட்டாரு
டிக்கெட்டு ஏழுரூவான்னு
மெரட்டலா கேட்டாரு

பையில ஒரே நூறுரூவா

மகள பாத்துபுட்டு
வீட்டுக்கு கூட்டிபோக
இதுவே போதுமாக்கும்..
டிக்கட்ட கொடுத்தவரு
மிச்சத்த குடுக்காம
முன்னாடி போனாரு..

அய்யா மீதி.. அய்யா பாக்கி...

யோவ்.. பஸ்ஸில வந்தா சில்லரை தரனும்..
இல்லாட்டி பொருமையா தர்ரப்ப வாய்ங்க்கனும்..
கத்திட்டு போய்ட்டாரு...

மகளபத்தியே மனசுநெனக்க
மீதிரூவா மறந்தேநான் போக
அஞ்சுகிராம ஸ்டாப்புல
நெஞ்சுவலிக்க நின்னேன்...

பஸ்ஸுவரும் நேரமாசு பைக்காசு விட்டுப்போச்சு..
தெரிஞ்சவங்கள தேடி நொந்தே போயாச்சு
பஸ்ஸுவந்தும் ஏறமுடியல
பலபேரு இருந்தும் தெரிஞ்ச ஆளில்ல..

மெதுவா பஸ்போக மனசு கதறுச்சு..
கடவுளே நீதந்த தண்டனயா?
நான் ரிட்டயடு கண்டக்டர்...

1 comment:

  1. நன்றாயிருக்கிறது. (உங்கள் மற்ற படைப்புகளையும் படித்தேன்.)

    ReplyDelete