Thursday, January 28, 2010

ஐந்து வயது வீரன்

ஐந்து வயது வீரன்

உலகையாண்ட நாட்டின்தலை நகரமான லண்டன்
உவகைகொண்ட மக்கள்மிகு விடுதிநிறை லண்டன்
நடனமாடி உயர்பிழைக்கும் மாதுஒரு இடத்தில்
கடமையென நோயிருந்தும் மேடைஏறி நடந்தாள்

வீரர்களும் கலகர்களும் கூடிவரும் சங்கமாம்
மாதிவளின் தளர்ந்தஉடல் கலகமூள விட்டதாம்
கையில்பட்ட பொருளெடுத்து வீசினார்கள் அவள்மீது
தையல்உடல்  பெருமளவு நைந்துவிட பொருக்காது

மேடைஇறங்கி அலுவலருடன் பணம்வேண்டி நிற்க
ஓடைபோல ஐந்துவயது அவள்மகனோ மேடையேறி
கோபம்கொண்ட ஆடவரின் அகம்குளிர மழலையால்
வேகங்கொண்டு பாடிவிட அரங்கமெங்கும் கரவொலி

ஐந்துவயதில் சபையேறி ஆரவாரம் கண்டவன்
அகிலம்புகழ் சாப்ளின்எனும் சிரிப்புலக மன்னவன்.

1 comment: