Tuesday, January 26, 2010

காதல்

கல்லூரிப்பருவம்..
காதலை ஏங்கிப்பார்க்கும் இளமையின் கார்காலம்..


தன்மீது பெண்பார்வை
ஒருநொடி நிறுத்திப்போனாலே
உறைந்துவிடும் ஆர்டிக்பருவம்..


அது
காதலையும் கனவுகளயும்
உண்டு சுவாசித்துத்திரியும்
வானம்பாடிகளின் வர்ணஜாலம்


நம் கவிதைநாயகனும்
அனைவரையும் போல்
கற்பனையில் அரசமைத்து காதலித்தான்..


தேனில் மோகம் கொண்டவருக்கோ
தேனீக்களின் கொடுக்குகள் புறக்கணிக்கப்பட்டவையே..!


காதலின் கவிழ்ந்த பலருக்கு
அவமானம் அமிழ்தத்தூறல்..


மனதின் மகாராணி சிரித்துவிட்டாள்
நோக்கினான் ஆடியை நூறுமுறை..


இல்லத்தரசியாய்
அவளை அடைந்திடவே 
முயற்சிகள் முனைந்தான் பலமுறை 


தேனை நோக்கியே தேறினான் 
கல்லும் ஒருநாள் கசிந்தது காதற்பாகாய்..  


வெற்றிப்பாதையின் 
உச்சியில் இருப்பதாய் நினைத்து 
முரட்டுப்பாதையின் 
முதலடி முனைப்புடன் வைத்தான்.


மேகமது அருகினில் மெதுவாய் தவழ்வதுபோல் 
மெய்சிலிர்த்தான் அவள் பேச்சில்..  


மோகினி அவள் உதிர்த்த 
மொழியனைத்தும் சூளுரைத்தன 


காதலில் நாம் ஒருபுது 
பாதையை வகுப்போமென..  


வருமையும் வசதியும் 
உலர்தோலும் மிளிர்தோலும் 
உயரமும் மடுவும் ஒன்றாய் 
சிறகடித்தே ஓங்கிப்பறந்தன..


வசதி கொதித்தது.. 
பணம் பாதளாமிருந்து 
சினம் கொண்டு புறப்பட்டு 
சிறகொடித்து பிரித்தடைக்க 
எரிமலையாய் எழுந்தது..  


வீரமிக்க அண்மகன் 
காதற்கட்டுண்டால் 
தீப்பிழம்பில் சோறுசமைப்பான்..  


கல்நெஞ்சை தீப்பிழம்பில் உணவாக்கி 
காதலுக்கு படைத்திட காத்திருந்தான்..


போர்களத்தில் வாள் தொலைவதுபோல் 
தென்னைஉச்சியில் தேள் தீண்டியதுபோல் 
அறுவடைநேரம் அடைமழைபோல் 
நடுக்கடல்வழியே கலன்கவிழ்ந்ததுபோல்  


மோகினி காதல்வேடம் களைத்து 
செல்லமகள் பதவிகாக்க 
இடறிவிட்டாள் அவன் 
இதயத்தை இடதுகையால்..


நிலவில்லா இரவென்ன நிலத்தாவிடும்? 
அவளின்றி வாழ்வென்ன அழிந்தாவிடும்? 
அடியில்லா அண்டமென்ன முடிந்தாவிடும்? 
வழியுண்டு வாழ்வதற்கு முயன்றால்வரும்..

No comments:

Post a Comment